நிலத் தகராறு & பட்டா மாறுதல்
நிலத் தகராறு, பட்டா மாறுதல் போன்ற வழக்குகளில், நீதிமன்றங்கள் வழங்கி இருக்கின்ற தீர்ப்புகள்.
நீங்கள் பதிவு இறக்கம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
எந்த அளவு முடியுமோ அந்த அளவுக்கு,
உங்கள் நண்பர்களுக்குப் பரப்புங்கள்.
(Land Disputes)
- வழக்கு நிலுவையில் இருக்கும் போது
பட்டா மாறுதல் போன்ற நடவடிக்கைகளில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபடக்கூடாது.
நில நிர்வாக ஆணையர் – கடித எண் – K3/27160/2018, dt – 13.3.2018
சென்னை உயர்நீதிமன்றம் – W. P. No – 24839/2014, dt – 16.7.2018
W. P. No – 491/2012, dt – 4.6.2014
W. P. No – 16294/2012, dt – 4.4.2014
- சொத்தின் பத்திரம் உரிமையாளர் பெயரில் இருந்தால்,
அவரிடமே சொத்தின் உரிமை மூலம் இருப்பதாகக் கருத வேண்டும்.
மற்றவர்களுக்கு பட்டா மாறுதல் செய்தால் அது தவறு.
S. A. No – 313 & 314/2008, dt – 11.2.2019
- விஏஓக்கள் திருட்டுத்தனம் குறித்து ஆய்வு செய்ய,
ஒவ்வொரு மாவட்டத்திலும் துணை ஆட்சியர் தலைமையில் குழு அமைக்க வேண்டும்.
தவறு செய்யும் விஏஓக்களை
பணி நீக்கம் செய்ய வேண்டும்.
W. P. No – 13916/2019, dt – 1.7.2019
- சொத்தின் உரிமையாளர் யார் என்பதை
வருவாய்த் துறையினர் தீர்மானிக்க முடியாது.
உரிமை இயல் நீதிமன்றத்திற்கே அந்த அதிகாரம் உள்ளது.
W. P. No – 18489/2009, dt – 1.7.2011
- பட்டா உரிமையைக் காட்டக்கூடிய ஆவணம் கிடையாது.
பதிவு ஆவணம் எதுவும் இல்லாமல் பட்டாவை வைத்து மட்டும் ஒருவர் தான்தான் உரிமையாளர் என்று கூற முடியாது.
S. A. No – 84/2006, dt – 1.9.2015 மதுரை உயர்நீதிமன்றம்
- பட்டா சொத்தின் உரிமையை காட்டக்கூடிய ஆவணம் கிடையாது.
பட்டாவை வைத்து சொத்தில் உரிமை ஏதும் கோர முடியாது.
S. A. No – 2060/2001, dt – 2.11.2012
S. A. No – 1715/1989, dt – 25.6.2002
W. P. No – 16294/2012, dt – 3.4.2014
- கிராம நத்தம் நிலத்தில் அரசுக்கு எந்த உரிமையும் கிடையாது.
நத்தம் நிலத்தில் நீண்ட காலமாக வீடு கட்டிக் குடியிருந்து வருபவர்களுக்கு
பட்டா வழங்க வேண்டும்.
Madras High Court
W. P. No – 18754, 20304, 2613/2005
DT – 4.11.2013
A. K. Thillaivanam Vs The District collector, Chennai Anna District (2004 – 3 – CTC – 270)
The executive officer, Kadathur town panjayath Vs V. S. Swaminathan (2012 – 2 – CTC – 315)
- பட்டா பெயர் மாற்றம் செய்ய
நீண்ட காலதாமதம் செய்தால் அந்த அதிகாரிக்கு தண்டம் விதிக்கப்படும்.
W. P. No – 19428/2020, dt – 6.1.2021 (K. A. Ravichandran Vs The District collector, Vellore and others) - போலி பட்டா வழங்கும் அதிகாரிகளை
பணி நீக்கம் செய்ய வேண்டும்.
W. P. No – 11279/2015, dt – 22.3.2019, madurai high court
- பட்டாவில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்ய வட்ட ஆட்சியருக்கே அதிகாரம் உண்டு. வருவாய் கோட்ட ஆட்சியா்
பட்டா மாற்றம் செய்ய முடியாது. ஆனால், கோட்ட ஆட்சியா் முதல் மேல்முறையீடு அலுவலர் ஆவார்.

Very useful for our legal programmes in the village peoples. Thank you sir
மக்களுக்கு தேவையானதை, சட்டத்தின் பால் எவ்வாறு பெற முடியும் என்பதையும், அந்தச் சட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வும் தாங்கள் நடத்தும் youtube வகுப்பை பார்த்து பயனாளியாக உள்ளேன். தங்களின் பெரும் பணி தொடரவும் இறைவனை பிராத்தித்து வேண்டுகிறேன்.
Good and valuable post. Thanks
சமூகத்திற்க்கு தேவையான. இயக்கம்.
உங்கள் சேவைக்கு மிக மிக நன்றி. வழக்கு நிலுவையில் இருக்கும் போது இன்னமும் போலீஸ் துறையினர் நிலத்தின் மீது ஒரு தலைப்பட்சமாக நடந்து கொள்கின்றனர். இந்த சட்டங்களை அறிவதன் மூலம் காவல் துறையிடம் நாம் தைரியமாக பேச முடிகிறது
தங்களது பதிவுகள் என்னை போன்ற பாமரனும் இலகுவாக புரிந்து கொள்ளும் நிலையில் உள்ளது.
கிராம நத்தம் அவனும் மற்றும் வழக்கு நிலுவையில் இருக்கும் போது பட்டா மாறுதல் செய்யக்கூடாது என்ற தமிழ் ஆவணமும் தேவைப்படுகிறது
நீதிமன்ற உத்தரவின் நகல் PDF இருந்தால் நன்றாக இருக்கும்
நில நிர்வாக ஆணையர்
கடித எண்:K3/27160/2018
நாள்:13/03/2018
இக்கடிதத்தின் நகல் அனுப்பவும்.
Very useful information sir
Very useful information sir
👌